Join Us | About | Contact Us
Font Size: A A A
Madras Diocese Logo
off

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான், கலாத்தியர் 6 : 7

ன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தின் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான் என்று பவுல் அப்போஸ்தலர் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் கூறுகிறார், நாம் சிறுவயது முதல் வேதவாக்கியங்களை அறிந்தவர்களாக இருக்கிறோம், வேதவாக்கியங்கள் தேவனால் அருளப்பட்டதாக இருக்கிறது, இவைகளை நாம் பின்பற்றினால் உபதேசத்திற்கும். கடிந்துகொள்ளுதலுக்கும். சீர்திருத்துதலுக்கும் நீதியைப் படிப்பிக்கிறதற்கும் பிரயோஜனமாக இருந்து நம்மை ஆவியின் வழியிலே நடத்தும்.

வேதாகமம் நமக்குப் போதிக்கும் சில உண்மையான காரியங்களை கவனிப்போம், இஸ்ரவேலர் புத்திரர் பலுகிப் பருகும்போது பார்வோன். இஸ்ரவேலருக்குப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியில் போட்டுவிடும்படி கட்டளையிட்டான், இந்தக் கட்டளையினால் இஸ்ரவேலர் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்பதை சொல்லிமுடியாது. எகிப்தியர் இதனால் சந்தோஷப்பட்டிருப்பார்கள், கர்த்தர் மோசே. ஆரோனிடம் கடைசியாக இஸ்ரவேலரை அடிமைத் தனத்திலிருந்து மீட்க எகிப்தியரின் முதற்பேறானவைகளையெல்லாம் அதம் பண்ணுவேன் என்று சொல்லி அவைகளை அழித்தார், மகா கூக்குரல் எகிப்தில் உண்டாயிற்று, சாவில்லாத வீடு ஒன்றும் இல்லை, இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட அதே வேதனையை எகிப்தியர் அனுபவித்தனர், அவர்கள் முன்பு விதைத்ததை பின்பு அறுத்தார்கள்.

யாக்கோபு தன் மாமனாகிய லாபானால் வஞ்சிக்கப்பட்டான், லாபான் ராகேலுக்கு பதிலாக லேயாளை முதலில் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான், லேயாளுக்காக 7 வருடமும். ராகேலுக்காக 6 வருடமும் மொத்தம் 20 வருடம் உழைத்தான், மேலும் லாபான் யாக்கோபை வஞ்சித்து 10 முறை அவன் சம்பளத்தை மாற்றினான், யாக்கோபு எத்தனாக. ஏசா என்று சொல்லி. ஏசாவுக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களை தன் தகப்பன் மூலம் பெறுகிறான், இவன் எப்படி ஏமாற்றினானோ அவ்வாறு ஏமாற்றப்பட்டான், எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்,

சில பொல்லாத மனிதர்கள் தானியேல்மேல் பொறாமைக் கொண்டு. இராஜாவிடம். இராஜாவாகிய உம்மை தவிர வேறு தேவனையாகிலும். மனுஷனையாகிலும் நோக்கி எந்த காரியத்திற்காகவும் விண்ணப்பம் பண்ணினால் அவன் சிங்க கெபியில் போடப்பட வேண்டுமென்று கட்டளை பிறபிக்க செய்தனர், தானியேல் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி தோத்திரம் செலுத்தினான், இதையறிந்த அந்தப் பொல்லாத மனிதர்கள் தானியேலை சிங்கக் கெபியிலே போட உத்தரவுப் பெற்று இராஜாவிடம் முத்திரை போட வைத்தனர், ஆனால் சிங்கக் கெபியில் போடப்பட்ட தானியேலை சிங்கங்கள் ஒன்றும் செய்யாதபடி கர்த்தர் சிங்கத்தின் வாயைக் கட்டிப்போட்டார், தானியேல் உயிரோடிருக்கிறதைக் கண்ட தரியு இராஜா தானியேல்மேல் குற்றம் சாட்டின மனுஷரையும் அவர்கள் மனைவிகளையும் குமாரர்களையும் சிங்கக் கெபியில் போட உத்தரவிட்டார், சிங்கம் அவர்கள் எலும்புகளை எல்லாம் நொறுக்கி போட்டது, விதைத்ததை அறுத்தார்கள்.

ஒரு மனிதன் தன் வயதான தகப்பனுக்கு ஒரு பழைய தட்டில் தான் தினமும் உணவு கொடுப்பான். இதை கவனித்து வந்த அந்த மனிதனின் மகன் ஒரு நாள் அந்தத் தட்டை எடுத்து ஒளித்துவைத்து விட்டான், அந்த மனிதன் தகப்பனுக்கு உணவு கொடுக்க தட்டை தேடினான், அப்பொழுது அந்தச் சிறுவன். “அந்தத் தட்டை நான் தான் ஒளித்து வைத்திருக்கிறேன்; ஏனென்றால் அப்பா வயதான பிறகு நான் உங்களுக்கு உணவு கொடுப்பதற்காக அந்தத் தட்டை பத்திரப்படுத்தி இருக்கிறேன்!” என்றானாம், இதிலிருந்து நாம் விதைக்கிறதை தான் அறுப்போம், முற்பகல் செய்தது பிற்பகல் நமக்கு வரும்.

ஆகையால் இந்த உலகில் நம்முடைய வாழ்நாளிலே நாம் நன்மையான காரியங்களை பிறருக்கு நம் மனமார செய்து அதனால் ஏற்படும் நன்மையைப் பெறுவோம்.

- Mrs. Daisy Edwin

About the Author
MENU