Join Us | About | Contact Us
Font Size: A A A
Madras Diocese Logo
off

நன்மை செய்யுங்கள்

நன்மை செய்யுங்கள்

நா

ம் நன்மை செய்ய அறிந்திருந்தும் அதை செய்யாமற் போனால் பாவம் யாக், 4:17 என்று வேதாகமம் கூறுகிறது, ஆகையால் ஒவ்வொரு நாளும் நன்மை செய்ய நமக்கு வாய்ப்பு ஏற்படும் சமயங்களில் நம்மால் இயன்ற நன்மைகளை பிறருக்குச் செய்வோம், எபே, 2:10ல் நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். என வாசிக்கிறோம், ஆகையால் கிறிஸ்துவுக்குள் மறுபிறப்படைந்த நாம் நன்மை செய்யவே பிறந்திருக்கிறோம்.

நன்மை செய்யும்படி உனக்கு திராணி இருக்கும் போது அதை செய்யத் தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே, நீதி, 3:27, ஒரு உண்மை சம்பவத்தை எழுதுகிறேன், என்னுடைய இளைய மகன் இரத்ததானம் (blood donation) காலேஜில் படிக்கும்பொழுது செய்து கொண்டிருந்திருக்கிறான், இது எனக்குத் தெரியாது, ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்து. என் மகன் பெயரைச் சொல்லி. இந்த பெயரில் உள்ளவர் வீடு இதுதானா என்று கேட்டார், ஆம் என்றேன், அதற்கு அவர் இந்த blood group  உள்ள உங்கள் மகன் blood, ஆஸ்பத்திரியில் உள்ள என் தங்கையின் கணவருக்கு தேவைப்படுகிறது, அவர் மிகவும் மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார், இந்த விலாசத்தை ஆஸ்பத்திரியிலிருந்து வாங்கி வந்தேன் என்றார், அவர் போனபிறகு. என் மகன் வந்தவுடன் இதைச் சொன்னேன், 10 நாட்கள் சென்றபிறகு. முன்பு வீட்டிற்கு வந்த அதே நபர் எங்கள் வீட்டிற்கு வந்து என் தங்கையின் கணவர் சுகமாகி வீடு திரும்பினார். நன்றி சொல்ல வந்தேன் என்று சொல்லிப் போனார், மேலும் கிறிஸ்மஸ் சமயத்தில் பெரிய அழகிய கார்டில் தன் நன்றியைத் தெரிவித்து எழுதி அனுப்பினார், அவர் ஒரு புறமதஸ்தர், நம்மில் அநேகர் இதேபோன்ற காரியங்களை அவ்வப்போது செய்து வருகிறோம், இது தேவனுக்கு பிரியமானது.

இயேசுகிறிஸ்து உலகத்தில் நன்மை செய்கிறவராகவே சுற்றித்திரிந்தார், கிறிஸ்து உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும். உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்றார், கெத்சேமெனே தோட்டத்தில் தம்மைப் பிடிக்க வந்தபொழுது பேதுரு மல்குஸ் காதை வெட்டினான், ஆனால் தேவன் அவன் காதை தொட்டு சொஸ்தமாக்கினார், சிலுவை மரத்தில் தொங்கும்பொழுது தன்னை துன்பப்படுத்தினவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டினார்,
யோசேப்பு தன் சகோதரர்களால் விற்கப்பட்டான், ஆனால் அவன் பார்வோனால் உயர்த்தப்பட்டு. பெரிய நிலைமைக்கு வந்தபொழுது தன் சகோதரர்களையும் தகப்பனையும் ஆதரித்தான் தீமையை நன்மையால் வென்றான்.

தாவீது கோலியாத்தை வென்று சவுலுக்குக் கீர்த்தியை உண்டாக்கினான், ஆனால் சவுல் தாவீது மீது பொறாமைக் கொண்டு அவனை துரத்தினான், சவுல் தூங்கும் பொழுது. தனி குகையில் தாவீது சவுலை பார்க்க சந்தர்ப்பம் வந்தபொழுது. அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவரை கொல்லக்கூடாது என்று சவுலை கொல்லாமல் விட்டுவிட்டான், தாவீது. சவுல் செய்த தீமைக்குத் தீமை செய்யாமல் நன்மை செய்தான்.

1 பேதுரு 3:13 நீங்கள் நன்மையை பின்பற்றுகிறவர்களானால் உங்களுக்கு தீமை செய்கிறவன் யார்? என வாசிக்கிறோம், 1 தெச, 5:15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்,
உன்னிடத்தில் நீ அன்பு கூறுவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்று வேதவாக்கியம் சொல்லும் ராஜரீக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்வீர்கள் யாக், 2:8
தீமையை நன்மையினால் வெல்லு.

- Mrs. Daisy Edwin

About the Author
MENU