Join Us | About | Contact Us
Font Size: A A A
Madras Diocese Logo
off

உடைந்த பாத்திரம்

உடைந்த பாத்திரம்

ர்த்தர் எரேமியாவை குயவன் வீட்டிற்கு அனுப்பி அங்கே தமது வசனத்தை தெரிவிக்கிறார் (ஏரே, 18:1-6), குயவன் பாத்திரங்களை வனைத்துக் கொண்டிருக்கிறான், ஒரு பாத்திரம் கெட்டுப் போனது, அவன் அதை எரிந்து விடாமல் புதிய பாத்திரமாக மாற்றுகிறான், இதே போல் இயேசுகிறிஸ்து உடைந்துபோன பாத்திரமான நம்மை மீட்க சிலுவையில் தொங்கினார், குயவன் கையில் களிமண் இருப்பது போல நாமும் கர்த்தருடைய கையில் இருக்கிறோம், நாம் உடைந்துப் போகும் போது அவர் நம்மை புதிய பாத்திரமாக மாற்ற வல்லவராயிருக்கிறார், இதற்கு நாம் செய்ய வேண்டியது நாம் அவருக்கு உகந்த பாத்திரமாக இருக்க வேண்டும், கர்த்தர் பவுலை நான் தெரிந்துக் கொண்ட பாத்திரம் என்கிறார், இவ்வாறு தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கும்படி நாம் நடந்துக் கொள்ளவேண்டும், களிமண் பாத்திரமாகிய நாம் பாவத்தாலும் அக்கிரமத்தாலும் உடைந்து போகாதப்படி நாமே நம்மை காத்துக் கொள்ளவேண்டும்,

உடைந்த பாத்திரமாக இருந்த ஒரு வாலிபன் கர்த்தரால் நல்ல பாத்திரமாக மாற்றப்பட்ட ஒரு சம்பவத்தை எழுதுகிறேன், இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தாய் தன் மகனை தூங்க வைப்பதற்கான தாலாட்டு பாட்டாக “எருசலேம் என் ஆலயம்” என்ற பாட்டை பாடி தூங்க வைப்பாள், பிறகு வேதனையும் பாடுகளும் நிறைந்த அவள் வாழ்க்கையில் அமைதியையும் இளைப்பாறுதலையும் பெறுவதற்காக இப்பாடலை பாடுவது அவளது வழக்கமாயிருந்தது, உடைந்த பாத்திரமாக இருந்த அவளுக்கு இந்த பாடல் ஆறுதலாயிருந்தது, அந்தி சாயும் நேரத்தில் மாடுகளை ஓட்டிக் கொண்டு வரும் மகனுக்கு தாயின் இப்பாடலின் சத்தம் அவனை வரவேற்கும், நாளடைவில் அந்த தாய் பெலவீனமடைந்து மரித்து போனார்கள், மகன் தகப்பன் கொடுமையை தாங்க முடியாமல் தன் தாயின் பொக்கிஷமாகிய வேத புத்தகத்தையும் தன் உடைமைகளையும் எடுத்துக்கொண்டு பட்டணத்திற்கு ஓடிப் போனான், அங்கு தீய நண்பர்களுடன் பழகி தன் உடலையும் வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்டு (உடைந்தபாத்திரமாக) வியாதிக்குட்பட்டான், ஒரு பொது விடுதியில் மரண அவஸ்தை பட்டுக் கொண்டிருந்த அவனை சந்திக்க மிஷினரி ஒருவர் வந்தார், ஆண்டவரின் அன்பைப்பற்றி பலமுறை எடுத்துக் கூறியும் அவன் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான், இம்முயற்சியில் தோல்வியுற்று மனமுடைந்த மிஷினரி மரிக்கும் அந்த வாலிபன் விடுதி ஜன்னலருகே சென்று எருசலேம் என் ஆலயம் என்ற பாடலை மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தார், அதை கேட்டவுடன் அவ்வாலிபன் கண்ணீர் மல்க இது என் தாய் விரும்பிய பாடல் அல்லவா என்றான், அப்பொழுது அவனுடைய தாயின் ஜெபமும் பக்தி வாழ்க்கையும் அவன் கண் முன் தோன்றின, அவன் இருதயம் உடைக்கப்பட்டது, என் தாயின் பாடலை எத்தனை ஆண்டுகள் மறந்து போனேன் என்று புலம்பினான், அந்நிலையில் மிஷினரி அவனுக்கு தாயின் அன்புக்கு மேலான இயேசுவின் அன்பை எடுத்துரைத்தார், அந்நேரமே இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு புது பாண்டமாக மாற்றப்பட்டு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்று மரித்தான், அமைதலான அவன் முகத்தை பார்த்த மிஷினரி தூர இடத்தில் அலைந்து திரிந்த மகனை தம் அண்டை சேர்துக்கொள்ள ஆண்டவர் அத்தாயின் தாலாட்டை உபயோகித்தார் என்பதை அறிந்தார்,

யோபு அதிக ஆசீர்வாதங்களோடு வாழ்ந்த நீதிமான், துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது, பருக்கள் நிறைந்த அவைகளால் பாதிக்கப்பட்டு ஓட்டை எடுத்து சுறண்டிக்கொண்டான், மனைவியோ. நீ தேவனை தூஷித்து உயிரை விடும் என்றாள், எல்லாராலும் பரிகசிக்கப்பட்டான், யோபு எல்லா பக்கமும் உடைக்கப்பட்டான், உடைக்கப்பட்ட பாத்திரமான அவன் தேவனை நம்பினான், முன்னிலைமையைவிட பின் நிலைமை இரண்டத் தனையாக உயர தேவன் கிருபை செய்தார்,

யோசேப்பு தன் சொப்பனங்களை கூறியபோத அவன் சகோதரர்களால் உடைக்கப்பட்டான், போர்த்திபார் வீட்டில் பிசாசு அவன் மனைவி உருவத்தில் வந்தான், ஆனால் ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார், மனிதன் குணம் அடுத்தவனை உடைப்பதுதான், ஆனால் கர்த்தரை தேடினவர்களை அவர் உயர்த்தி தனக்கு உகந்த பாத்திரமாக மாற்றுவார், யோசேப்புக்கு போத்திபார் உயர்ந்த பதவியை கொடுத்தார்,

தாவீதின் ஒரே மகள் கற்பழிக்கப்பட்ட போது தாவீதால் காப்பாற்ற முடியவில்லை, தாவீதின் மகள் அப்சலோம் தாவீதுக்கு விரோதமானான், சவுல் தாவீதை துரத்து. துரத்து என்று துரத்தினான், தாவீது ஒரு உடைந்த பாத்திரமாக இருந்தான், தாவீது கர்த்தரை சார்ந்து இருந்ததால் இராஜாவாக உயர்த்தப்பட்டான்,

நகோமி புருஷனையும் பிள்ளைகளையும் இழந்து உடைந்த பாத்திரமாக காணப்பட்டாள், ஆனால் அவள் மருமகள் ரூத். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பட்டியலில் இடம்பெற்றாள்,

எசேக்கியா இராஜா உடைந்த பாத்திரமாக சாவை காண வேண்டிய நிலையில் கர்த்தரிடம் விண்ணப்பம்பண்ணி. அழுது 15 வருடம் வாழும்படியான அனுக்கிரகம் பெற்றான்,
சிம்சோன் உடைந்த பாத்திரமாக இருந்தான், இறக்கும் போது. ஒரு விசை கர்த்தரிடமிருந்து பெலன் பெற்று அநேகரை கொன்றான்,

நாம் உடைந்த பாத்திரமாக இருப்போமேயாகில் கர்த்தரிடம் நம்மை ஒப்படைத்து. நல்ல பாத்திரமாக அவர் நம்மை வனைய அவரிடம் நம்மை ஒப்படைப்போம்.

- Mrs. Daisy Edwin

About the Author
MENU